நெட்டிசன் நோட்ஸ்: ட்விட்டரும்.. எலன் மஸ்க்கும்; ஒரு ட்வீட் போட 2 ரூபாய்

நெட்டிசன் நோட்ஸ்: ட்விட்டரும்.. எலன் மஸ்க்கும்; ஒரு ட்வீட் போட 2 ரூபாய்
Updated on
2 min read

உலகின் பெரும் பணக்காரர் ஆன எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குகிறார். ட்விட்டர் நிர்வாகக் குழு மற்றும் மஸ்க் தரப்பில் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் உறுதியாகியுள்ளது. அந்த அறிவிப்பு முறைப்படி வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது குறித்து நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையாக தங்கள் கருத்துகளை பதிவிட்டும் ,சிலர் மீம்களை பகிர்ந்தும் வருகின்றனர்.அவற்றின் தொகுப்பு:

கருப்பு

எலான் மஸ்க் ட்விட்டர வாங்கியதற்கு பதிலா சன் குழுமத்த வாங்கியிருந்தா சந்தோஷ பட்டிருப்பேன்டா...

ஃfinix

ஜாக் கொடுக்காத மாற்றத்தை எலான் மஸ்க் என்ன கொடுக்க போறாரு பார்க்கறதுக்கு ஆர்வமா இருக்கேன்

K A V I N

ஒரு டுவிட் போட 2 ரூபாய்.
ஒரு ஆர்டி,லைக்,கமென்ட் செய்ய 1 ரூபாய்.
மாதாந்திர சலுகை அட்டை 1000ரூபாய் - எலான் மஸ்க்.

குச்சிமிட்டாய்

ஒரு ட்விட்ட நீக்கிய காரணத்துக்காக ட்விட்டரயே வாங்கிட்டான்.... ரியல் சுல்தான் எலான் மாஸ்க்

Balu

இனி ட்விட்டர் க்கு மாச மாசம் இது மாதிரி டேரிப்ல பேமண்ட் பண்ணாத்தான் ட்விட்டர் ஆப் ஓப்பன் ஆகும்னு அறிவிப்பு வந்தா..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in