Published : 10 May 2016 08:38 AM
Last Updated : 10 May 2016 08:38 AM

காப்பிராயன் கவிதை - ஓட்டை விக்காதே!

எந்தக் கட்சி நல்ல கட்சி
நீங்க சொல்லுங்க
எல்லாருமே நோட்டுத் தர்றான்
ஓட்டு வாங்கங்க!

வீடு வீடா கட்சிக்காரன்
போயி குடுக்குறான்
பரிசுப் பொருளு கிஃப்டுன்னு
போட்டுக் குடுக்குறான்!

அந்தக் கட்சிக் குடுக்குறத
இவன் தடுக்குறான்
இந்தக் கட்சிக் குடுக்கும்போது
அவன் மடக்குறான்!

புகாரு வந்து தேர்தல் கமிஷன்
புடிக்கப் போவுது
அதுக்குள்ள மேட்டர் முடிஞ்சி
எஸ்கேப் ஆவுறான்!

வாக்காளனே நீ லஞ்சம்
வாங்கக் கூடாது
காசுக்காக நம்ம ஓட்ட
விக்கக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x