Published : 25 Apr 2016 05:41 PM
Last Updated : 25 Apr 2016 05:41 PM

நெட்டிசன் நோட்ஸ்: வைகோ செய்தது வரலாற்றுப் பிழையா?

சாதி மோதல்களைத் தவிர்ப்பதற்காக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் வைகோ போட்டியிடப் போகிறார் என்ற செய்தி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் வைகோ இன்று மனுதாக்கல் செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென அவர் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை. இந்நிகழ்வை நெட்டிசன்கள் எப்படி பார்க்கின்றனர்?

>Iyyanars*:

தனது அரசியல் வாழ்வில் வைகோ இரு வரலாற்றுப் பிழைகளை செய்திருக்கறார்... ஒன்று, தி.மு.க வோடு கூட்டணி வைத்தது. இரண்டாவது இப்போது!

>Foodie Panda:

சரியான நேரத்தில் தவறான முடிவெடுப்பதில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்தார் தலைவர் வைகோ.

>கோ.செந்தில்குமார்:

கிடைக்குற கேப்புல வைகோ மீதான காழ்ப்பை எல்லாம் கொட்டித் தீர்த்துக்கறாங்க!

#நீங்க எப்படி பழிச்சாலும் அவர் சுத்தத் தங்கம்..!

>Jarvis:

தோல்வி பயத்தால் வைகோ பயந்து ஓடுகிறார் - H.ராஜா

#அதானே எவ்வளவு அடி வாங்குனாலும் ஓடுனது கிடையாது; அண்ணன பாத்து கத்துக்கனும்யா

>தமிழன்:

எல்லா கட்சித் தலைவர்களும் வெற்றி பெற்று சட்டசபை செல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தேன். வைகோ போட்டியிடாதது வருத்தமே!

#தேர்தல்2016

>Thennarasu G:

நாம் மிகவும் மதித்த தலைவர் வைகோ. இப்போது அவரது அடுத்தடுத்த முடிவுகள் என்னை யோசிக்க வைக்கிறது. எனினும் இப்போது நமக்கு தேவை மாற்றம். #நாம்தமிழர்

>கிறுக்கன் கிருஷ்ணா:

சட்டசபை தேர்தலில் போட்டியில்லை: வைகோ

அப்போ தேமுதிக மந்திரி சபையில் துணை முதல்வர் பதவி யாருக்கு..?

>கோ.செந்தில்குமார்:

வைகோ அவர்களே! நீங்க தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி தொகுதிகளில் எதுல வேணும்னாலும் நில்லுங்க! ஜெயிக்க வைக்கிறோம்.

#முல்லைப்பெரியாறு மீது ஆணை.

>Sushima Shekar:

கலைஞரை சாதியை வைத்து திட்டியது இப்போ backfire ஆகிறதோ? #வைகோ_விலகல்

>லொள்ளு மணி:

கலைஞர் மேல் குற்றம் சுமத்திய வைகோ கலைஞர் போட்டியிடும் தொகுதியிலோ, கொளத்தூரிலோ போட்டியிடட்டுமே! கோவில்பட்டி மட்டும்தான் தமிழ்நாடா?

>நாகசோதி நாகமணி:

வைகோ போட்டியிடவில்லை என்பது தோல்வி பயத்தை காட்டவில்லை, அவர் மக்களின் மீது வைத்திருக்கும் அபார நம்பிக்கையை மட்டுமே காட்டுகின்றது!

>தில்லுதொர 2.0 ‏@pbbalajii

வைகோ: எனக்கு தேர்தல்னா தாங்க பயம் மத்தபடி நா போராட்ட தலைவனுங்க!!

>பூ.கொ. சரவணன்

வைகோ தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவிப்பு. அவர் களத்தில் இருந்திருக்க வேண்டும். தோல்வி பயம் எனச் சொல்வதற்கு வாய்ப்பாகி விட்டது. எனினும் கூட்டணியின் வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரசாரம் செய்வார் என நம்பலாம்!

>சித்தர் இளவல்

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ.

மனது வெறுத்துச் சொல்கிறேன், வைகோ என்ற தனிப்பட்ட மனிதர் மீது அப்படி ஒரு பிரியம்.. ஆனால் அவருக்காகப் பேசி பல நேரங்களில் அவமானப்பட்டது உண்டு! மீண்டும் ஒரு மானசிகமான அவமானம்! ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் மீது உள்ள பிரியம் குறைவது இல்லை!

>ஆர். தியாகு

பெரும் ஓட்டுவங்கி இல்லாமலே ஒரு பெரிய‌ கூட்டணியை உருவாக்கிய வைகோ. திமுக முயன்றதை முறியடித்து, விஜயகாந்தை கூட்டணிக்கு கொண்டுவந்த வைகோ! சாதி அரசியலை தகர்க்க‌ முடியாதா..?

தேர்தல் களத்திலிருந்து பின்வாங்குவது அவரது நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x