

இந்தியத் தொழில்துறையின் முக்கியத் தூண்களில் ஒருவரும், பிர்லா சாம்ராஜ்யத்துக்கு அஸ்திவாரம் இட்டவருமான கன்ஷ்யாம் தாஸ் பிர்லா (Ghanshyam Das Birla- G.D. Birla) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* ராஜஸ்தான் மாநிலம் பிலானியில் பிறந்தார் (1894). உள்ளூரிலேயே ஒரு ஆசிரியரிடம் எண் கணிதம் மற்றும் இந்தியில் ஆரம்பக் கல்வி கற்றார். தந்தையும் வியாபாரி என்பதால் அவரது உதவியுடன் கல்கத்தா சென்று வியாபார உலகில் அடியெடுத்து வைத்தார். தரகு வியா பாரம் செய்தார். பின்னர் பிர்லா சணல் தொழிற்சாலையைத் தொடங் கினார்.
* இவர் வர்த்தகத்தில் ஈடுபட்டது ஐரோப்பிய வியாபாரிகளுக்குப் பிடிக்கவில்லை. இவரது வளர்ச்சியைத் தடுக்கும் முனைப்பில் ஈடுபட்டனர். ஆனால் எல்லாத் தடைகளையும் தாக்குப்பிடித்தார். முதல் உலகப் போரின் தாக்கத்தால் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம் வியாபாரத்தில் திணறிக்கொண்டிருந்தது.
* இதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார். வியாபாரம் அசுர வளர்ச்சி கண்டது. 1919-ல் உலகப் போர் முடிந்தவுடன் பிர்லா அண்டு பிரதர்ஸ் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கினார். அதே ஆண்டில் குவாலியரில் ஜவுளி ஆலை தொடங்கினார். இது ரயான் என்கிற சிந்தடிக் ஆடைகள் பிரபலமடைய காரணமாக இருந்தது.
* பிர்லா இந்திய விடுதலை இயக்கத்தின் பெரும் ஆதரவாளராக விளங் கினார். அதற்கான நிதி உதவியை வழங்கினார். பொருளாதார விஷயங் களில் காந்தியடிகளுக்கு ஆலோசனைகளையும் வழங்கிவந்தார்.
* 1924-ல் கேஷோரம் காட்டன் மில்லை விலைகொடுத்து வாங்கினார். 1926-ம் ஆண்டு ஜி.டி.பிர்லா பிரிட்டிஷ் இந்தியாவில் மத்திய சட்டசபையில் அங்கத்தினராகத் தேர்வு செய்யப்பட்டார். சில தொழி லதிபர்களுடன் இணைந்து 1927-ல் மத்திய வர்த்தக மற்றும் தொழில் கழகத்தைத் தொடங்கி, அதன் தலைவராகவும் பதவியேற்றார்.
* 1932-ல் ஹரிஜன் சேவக் சங் என்ற அமைப்பின் தலைவரானார். ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘இந்துஸ்தான் மோட்டார்ஸ்’ தொழிற் சாலைகளை நிறுவினார். தொடர்ந்து வளர்ச்சியடைந்து வந்த பிர்லா குழுமம், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஆங்கிலேய நிறுவனங்களுக்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களையும், ஜவுளி ஆலைகளையும் வாங்கியது.
* அது மட்டுமல்லாமல் சிமென்ட், ரசாயனம், ரயான், உருக்குக் குழாய்கள், தகவல் தொழில்நுட்பத் துறை என அனைத்து நவீன துறைகளிலும் நுழைந்து வெற்றிக் கொடி நாட்டியது. 1942-ல் இந்திய மூலதனம், இந்திய மேலாண்மையைக் கொண்டு ஒரு புதிய வங்கியைத் தொடங்கும் எண்ணம் கொண்டார். அடுத்த ஆண்டே யுனைடெட் கமர்ஷியல் வங்கி (தற்போதைய யு.கோ. வங்கி) கல்கத்தாவில் தொடங்கப்பட்டது.
* அதே ஆண்டில் ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகத்தைத் தொடங்கினார். 1964-ல் பிலானியில் பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியைத் தொடங்கினார். இந்நிறுவனம் பல்வேறு கல்லூரிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை தொடங்கி இலவசமாகக் கல்வி வழங்கியது.
* புதுதில்லி, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளைப் பளிங் குக் கற்களால் ஆன பிரம்மாண்டமான கோயில்களை பிர்லா குடும்பத்தினர் அமைத்துள்ளனர். ஏராளமான அறிவியல், ஆன்மிக, கல்வி மற்றும் தொழில்துறை நிறுவனங்களையும் நிறுவினார்.
* 1957-ல் பத்ம விபூஷண் விருது கிடைத்தது. தன் சுய முயற்சியால் மகத்தான சாதனைகளை செய்து இந்தியாவின் தொழில் துறையை முன்னேறச் செய்த ஜி.டி.பிர்லா என்று அறியப்படும் கன்ஷ்யாம் தாஸ் பிர்லா 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 89-வது வயதில் காலமானார்.