

நடிகர் எம்.ஆர் ராதா நடித்த ‘ரத்தக் கண்ணீர்’ திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல், சமூக விமர்சனம், மூட நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் வசனங்களைக் கொண்டது. அந்தப் படத்தின் வசனங்களை எழுதியவர் திருவாரூர் கே. தங்கராசு. படத்தின் கதை, திரைக்கதையும் அவரேதான்.
1927 ஏப்ரல் 6-ல் நாகப்பட்டி னத்தில் பிறந்த திருவாரூர் கே. தங்கராசு, அரசு ஊழியராகப் பணி புரிந்த அவரது தந்தை குழந்தை வேலு, திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆனால், இளமையில் தங்கராசு, அதற்கு நேர் எதிராக ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார். பின்னாட் களில் பெரியாரின் கருத்துகளால் கவரப்பட்டார்.
நன்றாக படிக்கும் மாணவனாக இருந்த தங்கராசு, வறுமையால் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது. திருவாரூர் நகர திராவிடர் கழகத்தின் தலைவர் சிங்கராயருடனான நட்பு, திராவிடர் கழகத்தின் பக்கம் தங்கராசுவை இழுத்துவந்தது. பெரியாரின் கூட் டங்களுக்குத் தவறாமல் செல்லத் தொடங்கினார்.
ரத்தக்கண்ணீரின் பின்னணி
எம்.ஆர். ராதாவின் நாடகங் களில் கதை, வசனம் எழுதிவந்த கலைஞர் கருணாநிதி, ஏதோ கார ணத்துக்காக, அவரது குழுவிலி ருந்து விலகிவிட, சிங்கராயர் மூலம் அந்த வாய்ப்பு தங்கராசுவுக்கு வந்தது. எம்.ஆர். ராதாவுடன் தங்கி யிருந்த சமயத்தில் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை எழுதினார் தங்கராசு. 1949 ஜனவரி 14-ல் திருச்சியில் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் அரங்கேறி யது. ஒவ்வொரு முறையும் நாடகத் தின் காட்சிகள் மற்றும் வசனங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு, நாடகம் மெருகேற்றப்பட்டது.
சிவாஜி கணேசன் எனும் மாபெரும் கலைஞரை அறிமுகம் செய்த ‘பராசக்தி’ படத்தின் தயா ரிப்பாளரான ‘நேஷனல் பிக்சர்ஸ்’-பி.ஏ. பெருமாள், ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தைத் திரைப்படமாக எடுக்க முன்வந்தார். ‘பெற்ற மனம்’, ‘தங்க துரை’ ஆகிய படங்களுக்கும் கதை வசனம் எழுதியிருக்கிறார் தங்கராசு. எனினும், தன்னை ‘சினிமாக்காரன்’ என்று சொல்லிக்கொள்ள அவர் விரும்பவில்லை.
தனது கருத்துகளைப் பரப்பக்கூடிய வாகனம்தான் சினிமா என்று உறுதியான நிலைப்பாட்டில் இருந்தவர்.
தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் வேண்டும் என்றார் பெரியார். அவ ரின் மறைவுக்குப் பிறகு எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதற்காக எம்ஜிஆர் அமைத்த குழுவில் தங்கராசுவும் இடம் பெற்றிருந்தார்.
தமிழகத்தில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் வந்த தில் அவருக்கும் பங்கு உள்ளது. பத்திரிகைத் துறையில் அவருக்கு இருந்த அனுபவம் அதற்கு உதவியது.
பெரியாரின் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவராகவே கடைசிவரை இருந்தார் தங்கராசு. அண்ணா, கருணாநிதி, எம்.ஆர். ராதா என்று பலருடன் நல்ல நட்பும், அதேசமயம் முரண்பட்ட கருத்து களையும் கொண்டிருந்தார். தனது கருத்துகளை ஒளிவுமறைவில் லாமல் துணிச்சலாகப் பேசக்கூடிய தங்கராசு, 2014 ஜனவரி 5-ல் தனது 87-வது வயதில் மரணமடைந் தார்.
ஒரு உண்மையான பெரியார் தொண்டன் பதவிக்கோ பணத் துக்கோ ஆசைப்படக்கூடாது என் பார் அவர். அதைப்போலவே வாழ்ந்து காட்டினார் திருவாரூர் தங்கராசு.