Published : 04 Apr 2016 10:19 AM
Last Updated : 04 Apr 2016 10:19 AM

ஜொலிக்காத வைரம்!

தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராகத் திகழ்ந்த சிவாஜி கணேசனின் அரசியல் வாழ்க்கை, ஒருபோதும் வெற்றிகரமானதாக இல்லை.

திமுக, காங்கிரஸ் என்று வெவ்வேறு கட்சிகளில் இருந்த சிவாஜி, 1987-ல் தமிழக முன்னேற்ற முன்னணி எனும் கட்சியைத் தொடங்கினார். பின்னர், ஜனதா தளத்தின் தமிழகத் தலைவராகப் பதவி வகித்தார்.

1992-ல் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆட்சியில் விலைவாசி அதிகரித்துவிட்டதாக ஜனதா தளம் சென்னையில் நடத்திய போராட்டத்தில் கட்சித் தலைவர்கள் எஸ்.ஆர்.பொம்மை, இரா.செழியனுடன் கலந்துகொண்ட சிவாஜி, போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு வேனில் ஏற்றப்படுகிறார்.

படம்: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x