

100 சதவீத ஓட்டுப் பதிவை இலக்காகக் கொண்டு, தமிழக தேர்தல் ஆணையம் சமூக ஊடகங்களுடன் கைகோத்து இளைஞர்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஆக்டிவாக இயங்கி வருகிறது.
>#TN100percent>#ElectionPunch>#DontSellYourVotes ஆகிய ஹேஷ்டேக்-களில், தேர்தல் ஆணையக் குழுவினர் வாக்குப் பதிவை நூறு சதவீதமாக்க, ஏராளமான விழிப்புணர்வு உத்திகளைக் கையாண்டு வருகின்றனர். இளைஞர்களிடயே தேர்தல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்த தினந்தோறும் தேர்தல் பஞ்ச்கள் வெளியிடப்படுகின்றன. 'தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பஞ்ச்க்கும் ஒரு பரிசு உண்டு' என்றும் குறிப்பிடப்படுகிறது.
#TNEQ என்ற ஹேஷ்டேக்கின் கீழ் விதவிதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. தேர்தல் நடைமுறைகள், சட்டப்பேரவை, தேர்தல் வரலாறு உள்ளிட்ட பல சுவாரசியமான கேள்விகள் இதில் இடம்பெறுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு சரியான பதிலளிப்பவர்களின் ட்விட்டர் முகவரியைக் குறிப்பிட்டு அவர்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். பின்னர் அவரது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை (எபிக் எண்- EPIC), quiz.tnelections@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பச் சொல்கின்றனர்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்ச்களின் தொகுப்பு...
பெண்களைக் கவர
இல்லத்தரசிகளைக் கவரும் வகையில் காஸ் சிலிண்டர், சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வழங்கப்படும் பைகள், ஆவின் பால் பாக்கெட்டுகள் ஆகியவற்றிலும் ''மே 16-ல் தவறாமல் வாக்களிப்பீர்'' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.