Published : 15 Apr 2016 06:16 PM
Last Updated : 15 Apr 2016 06:16 PM

நெட்டிசன் நோட்ஸ்: பாமக தேர்தல் அறிக்கையும் குடிசை இல்லாத தமிழகமும்

கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றுக்கான அனைத்து தேவைகளும் இலவசமாக வழங்கப்படும். ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த சிறப்புத் திட்டம் கொண்டுவரப்படும். ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம்; ஒரு பைசா ஊழல் இல்லாத தமிழகம்...

ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் ஒருவருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்படும். சாராயம் காய்ச்சுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் ஆகிய அதிரடி அறிவிப்புகளோடு பாமகவின் தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். பாமக அறிக்கை குறித்த நெட்டிசன் கருத்துகளின் தொகுப்பு.

>நானும் நல்லவன்:

மக்களுக்காக மக்களால் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை!

#பாமக_தேர்தல்_அறிக்கை

>மாஸ்டர் ஆனந்தன் ‏@gymmasterssa:

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும், தமிழக மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும். #பாமகடா

>ஆழ்வார்க்கடியான்:

மற்ற கட்சிகளை போல குறைகள் சொல்வதோடு மட்டுமே நிற்காமல், தீர்வுகளையும் சேர்த்தே முன்வைப்பதில் பாமக, நாம் தமிழர் கட்சிகள் கவனம் ஈர்க்கின்றன.

>சுரேஸ் ரா:

இந்தியாவின் முழு பட்ஜெட்டையும் தமிழ்நாட்டில் செலவு செய்தால் கூட, பாமக சொல்லும் திட்டங்களை 5 ஆண்டுகளில் நிறைவேற்ற முடியாது.

#வாயில்_வடை

*

பாமக ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் மழை பெய்ய ஏற்பாடு செய்யப்படும்னு மட்டும்தான் சொல்லலை #பாமக

>Muralidharan:

மாணவர்களுக்கான பேனா முதல் ஐ- பேட் வரை இலவசம்- பாமக தேர்தல் அறிக்கை.

மாணவர்களுக்கு எதற்காக ஐ- பேட்??

>☆ѕєℓναи:

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்கப்படும் - பாமக

#இது ஒரு மாநில அரசால் தீர்மானிக்கப்படக்கூடிய விசயமா? #டவுட்

*

என்னதான் சிறப்பான தேர்தல் வாக்குறுதி தந்தாலும், இத்தேர்தலில் நாகரிகமான அரசியல் செய்தாலும், ஜாதிக்கட்சி என்ற பேர் அழியப்போவதில்லை #பாமக

>Gowtham Palanivel:

சென்னையில் மிதிவண்டிப் போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும். #AnbuManiFesto

>ரம்யா:

KG முதல் அனைவருக்கும் இலவச கல்வி. தனியார் பள்ளி கட்டணத்தை அரசே செலுத்தும். தமிழகத்தில் உள்ள மது ஆலைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் - அன்புமணி

#மாற்றத்திற்கான_மக்கள்_சாசனம்

>Srinivasan Venkat:

சாராயம் காய்ச்சுபவருக்கு ஆயுள் தண்டணை.

சல்யூட் அடிக்க வேண்டிய வாக்குறுதி. முன்னேறும் பாமக.

>நையாண்டி நாரதர்:

அரசு ஊழியர்களுக்கு மாதம் இருமுறை சம்பளம் (1ம் தேதி பாதி 15ம் தேதி மீதி) - பாமக தேர்தல் அறிக்கை

#பேசாம எல்லாரையும் தினக்கூலி ஆக்கிடுங்கய்யா

>Murugesan Marimuthu:

#திமுக #பாமக இரண்டு கட்சிகளின் தேர்தல்அறிக்கையையும் இணைத்து, அதுமேல சில பல இலவசங்களை தூவி ஜெயலலிதா வெளியிடுவார். நோட் மை வேர்ட்.

>​பச்சைதமிழகம் மணியன்:சாராயம் காய்ச்சுவோருக்கு ஆயுள் - பாமக தேர்தல் அறிக்கை.

ஊட்டிக்கு தனியா தான் போகணுமா மொமண்ட்

>சுரேஸ்:

லாபத்தில் இயங்கும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படும். - அறிக்கை.

இதெல்லாம் மத்திய அரசாலதானே செய்ய முடியும்?! இந்த தேர்தல்ல பாமக ஜெயிச்சு அன்புமணி இந்திய பிரதமரா ஆகப் போறார்போல.

>இரா.தீபக்:

//ஐஐடிக்கு இணையான உயர் தொழிட்நுட்ப கல்வி நிறுவனம் (Tamilnadu Institute of Technology - TIT)

#பேரெல்லாம் யோசிச்சு வையுங்கைய்யா :-) #பாமக

>ஆதிரா ஆனந்த் குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். - பா.ம.க. தேர்தல் அறிக்கை

ஆமா. எல்லாத்தையும் கொளுத்தி விட்ருவோம்.

>Siva Balan:

பாமக தேர்தல் அறிக்கை கேக்கும் போது நல்லாதான் இருக்கு, இதெல்லாம் செய்ய பணத்துக்கு எங்க போவாங்கனு நினைக்கும் போதுதான் சிரிப்பு சிரிப்பா வருது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x