தினம் தினம் யோகா 46: புஜங்காசனம்

தினம் தினம் யோகா 46: புஜங்காசனம்
Updated on
1 min read

முதுகுப் பகுதியை நன்கு உறுதியாக வைத்துக் கொள்வதற்கு மிகவும் ஏற்றது புஜங்காசனம். பல்வேறு யோகாசனங்களை இணைத்து செய்யும் சூரிய நமஸ்காரத்தில் இதுவும் ஒரு முக்கிய ஆசனம் ஆகும்.

புஜங்காசனம் செய்வது எப்படி என பார்க்கலாம். ரிலாக்ஸாக குப்புற படுத்துக் கொள்ளுங்கள். இரு உள்ளங்கைகளையும் மார்பு, தோள்பட்டைக்கு பக்கவாட்டில் தரையில் பதியுமாறு வைக்கவும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். ஒரு முறை மூச்சை நன்கு இழுத்துவிடவும். இப்போது, மூச்சை இழுத்துக்கொண்டே, கைகளை நன்கு ஊன்றியவாறு, தலை, மார்புப் பகுதியை உயர்த்தவும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகள் நன்கு தரையில் பதிந்திருக்கட்டும்.

தலையையும் நன்கு உயர்த்துங்கள், பார்வை மேல் வானத்தை நோக்கி இருக்கட்டும். கால் முட்டிகள் தரையில் பட்டும் படாமலும் இருக்கட்டும். இப்போது, நன்கு மூச்சை இழுத்துவிடவும். 1-15 வரை எண்ணவும். மூச்சை வெளியே விட்டபடியே, தலை, மார்புப் பகுதியை கீழே இறக்கி, குப்புற படுத்து ரிலாக்ஸ் செய்யவும்.

புஜங்காசனத்தின்போது, மார்பு நன்கு அகன்று இருப்பதால், ஆழ்ந்த சுவாசம் நடக்கிறது. ரத்தத்துக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கிறது. வயிறு பகுதியில் உள்ள தேவையற்ற சதைகள் குறைகின்றன. இந்த ஆசனம் செய்வதால் செரிமானக் கோளாறுகள் சரியாகின்றன. கல்லீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் சீராகின்றன. அதிகப்படியான முதுகு வலி, கழுத்து வலி, ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்ப்பது நல்லது.

நாளை – ரிஸ்ட் வாட்ச்கட்டுவது ரிஸ்கா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in