Published : 08 Apr 2016 02:33 PM
Last Updated : 08 Apr 2016 02:33 PM

அலையில் உயர்ந்த இலை!

1984 தேர்தல் களம் உணர்வுபூர்வமாக அமைந்திருந்தது. 1984 அக்டோபர் 31-ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்தச் சமயத்தில், எம்.ஜி.ஆரின் உடல்நிலையும் மோசமடைந்திருந்ததால் சிகிச்சைக்காக அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தபடியே தேர்தலிலும் போட்டியிட்டார்.

காங்கிரஸ் - அதிமுக ஒரே அணியில் போட்டியிட்டன. தாயை இழந்த ராஜீவ் காந்திக்கும், உடல்நலம் சரியில்லாத எம்.ஜி.ஆருக்கும் அனுதாப அலை கைகொடுத்தது. இருகட்சிகளுக்கும் பெரும் வெற்றி. அந்தத் தேர்தலில் முடிவுகளை அறிய அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஆர்வமுடன் காத்திருக்கும் தொண்டர்கள்!

படம்: ‘தி இந்து’ஆவணக் காப்பகம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x