Last Updated : 07 Jan, 2022 06:48 AM

Published : 07 Jan 2022 06:48 AM
Last Updated : 07 Jan 2022 06:48 AM

தினம் தினம் யோகா 37: பரிவிருத்த ஜானு சிரசாசனம்

ஜானு சிரசாசனம் போலவே, இந்த ஆசனத்திலும் கால் முட்டியும், தலையும் இணையுமாறு செய்யப் போகிறோம். ஆனால், கொஞ்சம் வித்தியாசம்.

நேராக நிமிர்ந்து உட்காருங்கள். கால்கள் நீட்டி இருக்கட்டும். சுவாசம் சீராக இருக்கட்டும். மெல்ல, வலது காலை மடித்து உடம்பை ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். வலது பாதம் இடது தொடையை ஒட்டி இருக்கட்டும். இடது காலை நமக்கு நேராக இல்லாமல், சற்று இடது பக்கமாக நகர்த்திக் கொள்ளுங்கள். இடது கால் விரல்கள் மேல் நோக்கி இருக்கட்டும்.

ஒரு முறை மூச்சை நன்கு இழுத்து விடுங்கள். மெல்ல, இடது கையை இடது காலில் நகர்த்திச் சென்று, கால் விரல்கள் வரை கொண்டு செல்லுங்கள். இடது கையால் இடது கால் கட்டை விரலை கீழ்ப்பக்கத்தில் இருந்து பிடிக்கவும்.

மெல்ல வலது கையை மேலே உயர்த்தி, காது வரை கொண்டு வரவும். இப்போது, இடுப்போடு சேர்த்து உடம்பை இடது பக்கமாக பக்கவாட்டில் சாய்க்கவும். காதை ஒட்டியிருக்கும் வலது கையால் இடது காலை தொடுவதற்கான முயற்சி இருக்கட்டும். பார்வை மேல் நோக்கி இருக்கட்டும். இப்போது, நன்கு மூச்சை இழுத்து விட்டு 1-10 எண்ணவும். மூச்சை இழுத்தபடியே மெல்ல நிமிர்ந்து ரிலாக்ஸ் செய்யவும். அடுத்து, இதேபோல வலது பக்கம் செய்யவும்.

நாளை – ‘ஜானு’ ஆசனத்தின் பயன்கள்


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x