தினம் தினம் யோகா 21: விருட்சாசனம்

தினம் தினம் யோகா 21: விருட்சாசனம்
Updated on
1 min read

பர்த்டேக்கு ஜீன்ஸ்தான் வேணும் என்று ஒற்றைக்காலில் நின்றீர்கள்தானே, இந்த ஆசனத்துக்கு நீங்கள்தான் சரியான நபர்.

நிமிர்ந்து நிற்கவும். குதிகால்களை சேர்த்து, விரல் பகுதிகளை விலக்கி, கால்களை ‘V’ வடிவில் வைக்கவும். கைகளால் இடது கணுக்காலை பிடித்து, ஒருசில முறை தொடை வரை உயர்த்தவும்.

பிறகு, கைகளின் ஆதரவுடன் இடது கணுக்காலை பிடித்து உயர்த்தி, இடது பாதம் வலது தொடையில் பதியுமாறு வைக்கவும். இடது கால் விரல்கள் கீழ் நோக்கி இருக்கட்டும்.

ஜீன்ஸுக்கு ஒற்றைக்காலில் நிற்க முடிகிறது.. இங்கு நிற்க முடியாமல், தள்ளாடுகிறீர்களா? வலது கால் முட்டி அல்லது இன்னும் கீழேகூட இடது பாதத்தை வைத்துக் கொள்ளலாம்.

இப்போது பேலன்ஸ் வந்துவிட்டதா! மெல்ல கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சேர்த்து வையுங்கள். தொலைவில் உள்ள அசையாத பொருள் நோக்கி பார்வை இருக்கட்டும். 1-15 எண்ணுங்கள். கை, காலை கீழே இறக்கி ரிலாக்ஸ் செய்யுங்கள். அடுத்து, வலது காலை பயன்படுத்தி செய்யவும். பேலன்ஸ் வரும்வரை சுவரை ஒட்டி நின்று பயிலலாம்.

விருட்சம் என்றால் மரம். விருட்சாசனத்தால் கால் தசைகள் வலுவடைகின்றன. மனம் ஒருமுகப்படுகிறது. நினைவாற்றல், விழிப்புணர்வு, உடல் பேலன்ஸ் அதிகரிக்கிறது. கால், இடுப்பில் அதிக வலி உள்ளவர்கள், வயதானவர்கள் தவிர்க்கலாம். கவனச் சிதறல் குறைந்தால் தடுமாற்றமின்றி இந்த ஆசனம் செய்யலாம். இந்த ஆசனம் செய்யச் செய்ய கவனச் சிதறல் குறையும் என்பது சுவாரஸ்யமான உண்மை.

நாளை - பலன் தரும் பத்மாசனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in