Published : 07 Mar 2016 09:31 AM
Last Updated : 07 Mar 2016 09:31 AM

இணையகளம்: இந்தியா உருப்பட்டுடும்..!

ஆல்தோட்ட பூபதி

இந்த ஸ்டிக்கர், போஸ்டர், ஃப்ளெக்ஸ் பேனரெல்லாம் எடுத்த பிறகு எங்க ஏரியாவைப் பார்த்தா, ஷேவிங் செஞ்ச டி.ராஜேந்தர் போலவே இருக்கு!

பிரகாசம் பழனி

அதிமுக அரசின் அவலங்களைக் கூறிப் பிரச்சாரம் செய்வோம் - சரத்குமார்

# அப்படியே உங்களுக்குக் கிடைச்ச அவமானங்களையும் சொல்லிப்பாருங்க. அனுதாப ஓட்டு கிடைச்சாலும் கிடைக்கும்!

கிருஷ்ண குமார் அப்பு

ஏன்டா.. திமுக இன்னும் கேப்டனுக்காக வெய்ட் பண்ணுது? இருக்குற கட்சிகளோட கூட்டணி அறிவிச்சுட்டு தேர்தல் வேலைல இறங்க வேண்டியதுதானே? ஏப்ரல் 22 வேட்புமனு தாக்கலாம். இன்னும் 40 நாளுக்கு மேல இருக்கேன்னு கேப்டன் கம்முனு இருந்தா திமுககாரங்க என்னடா பண்ணுவாங்கன்னு அப்பா கேட்குறார்.

# நம்ம குடும்பம் நக்கல் புடிச்ச குடும்பமப்பா!

டி.வி.எஸ். சோமு

இந்த நாயைப் பார்த்தா பொறாமையா இருக்கு! டி.வி. விவாதம் பார்த்து டென்சன் ஆவுறதில்ல. ஃபேஸ்புக்ல கருத்துப் போடணுமேனு கவலைப்படுறது இல்ல. பகல்லேயே எவ்ளோ நிம்மதியா தூங்கறாரு!

கிருஷ்ண குமார் அப்பு

இன்றிலிருந்து தமிழ்நாடு அரசு இயங்கக் கூடாதாம்.

‪#‎ லீவுக்கே லீவு விடுறாங்க.‬

எழிலன். எம்.

பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார் என்ற உண்மையை அறிய, விசாரணை கமிஷன் அமைக்க ஆதரிப்பீர்!

# ஓபிஎஸ் ஃபார் சி.எம்.!

சி.பி.செந்தில்குமார்

தலைவரே! எந்த வயசு வரை ஒருவர் இளைஞர்? 18 டு 30. அப்போ, இளைஞர் அணித் தலைவர்? 60 டு 80.

ஈரோடு கதிர்

தலைவருங்க எதையாச்சும் சொல்லிப்புடுறாங்க… பாவம் அதுக்கு தொண்டருங்க பரிதவிச்சு ‘தம்’கட்டுற கொடுமை இருக்கே…

# ஷ்ஷ்ஷப்பா!

நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்

தமாகாவில் போட்டியிட 4,886 பேர் மனு அளித்துள்ளனர் - ஜிகே.வாசன்.

# பத்திரமா வச்சுகோங்க... பின்னாடி திருப்பிப் பால் கணக்கு எழுதலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x