Last Updated : 02 Dec, 2021 03:05 AM

 

Published : 02 Dec 2021 03:05 AM
Last Updated : 02 Dec 2021 03:05 AM

தினம் தினம் யோகா 01: வாங்க பழகலாம்!

உடல்நலம் பற்றிய அக்கறை நம் அனைவருக்குமே இருக்கிறது. ஒருசிலர் அதற்காக நேரம் ஒதுக்கி, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். சிலர் அந்த அளவு ரிஸ்க் எடுப்பது இல்லை. சிலருக்கு ஆர்வமும், கூடவே தயக்கமும் இருக்கும். உடல்நலம் வேண்டும் என்றால், உடனடியாக களமிறங்கத்தானே வேண்டும். நம் உடம்பாச்சே, நாம்தானே கவனிக்க வேண்டும். அதற்குத்தான் இந்த புதிய பகுதி ‘தினம் தினம் யோகா’.

யோகாசனம் என்றதும் நைசாக சிலர் எஸ்கேப் ஆகக்கூடும். அவர்கள், அநேகமாக தொலைக்காட்சிகளில் யோகா குருமார்கள் செய்கிற யோகாசனங்களை பார்த்தவர்களாக இருக்கலாம். இது இன்ஜினீயரிங் புத்தகங்களை பார்த்து எல்கேஜி குழந்தை பயப்படுவதுபோல.

கையை, காலை முறுக்கிக்கொண்டும், அந்தர்பல்டி அடித்து தலைகீழாக நின்றும் செய்வது மட்டுமே அல்ல யோகாசனம். நாம் சாதாரணமாக சம்மணக்கால் போட்டு உட்கார்கிறோமே, அதுவே ஒரு யோகாசனம்தான். அதன் பெயர் சுகாசனம். டிவி பார்க்கும்போது காலை நீட்டி உட்கார்கிறோமே, அது தண்டாசனம். கை, காலை நீட்டி ரிலாக்ஸாக படுத்துக்கொண்டால் சவாசனம்.

இப்படி ஒவ்வொரு யோகாசனம், அதை செய்யும் முறை, அதன் பலன்கள், யார் யார் செய்யலாம், யார் கூடாது என தினம் ஒன்றாக பார்க்கலாம். இது ஓர் அறிமுகமே. நன்கு கற்ற யோகா ஆசிரியரின் நேரடி வழிகாட்டுதலில் பயிற்சிகளை மேற்கொள்வது சிறப்பு.

நாளை - எப்போது செய்யலாம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x