Last Updated : 29 Nov, 2021 09:11 AM

 

Published : 29 Nov 2021 09:11 AM
Last Updated : 29 Nov 2021 09:11 AM

பளிச் பத்து 147: நூலகம்

# உலகின் பழமையான நூலகம் ஈராக்கில் உள்ள அஸிரியா எனும் இடத்தில் கி.மு 630-ம்
ஆண்டில் செயல்பட்டதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
# ஹார்வர்ட் நூலகத்தில் மனிதத் தோலால் தைக்கப்பட்ட 3 புத்தகங்கள் உள்ளன.
# தஞ்சாவூரில் உள்ள சரஸ்வதி மகால் நூலகம், ஆசியாவின் மிகப்பழமையான நூலகங்களுள் ஒன்றாகும். இந்நூலகம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டுள்ளது.
# அதிக நூலகங்களைக் கொண்ட நகரமாக போலந்தின் தலைநகர் வார்சா விளங்குகிறது.
இங்கு 10 ஆயிரம் பேருக்கு சராசரியாக 11 நூலகங்கள் உள்ளன.
# பண்டைக்காலத்தில் எகிப்து நாட்டுக்கு வரும் கப்பல்களுக்கு சொந்தமான அனைத்து புத்தகங்
களையும் அலெக்சாண்டிரியாவில் உள்ள நூலகத்துக்கு கொடுக்க வேண்டும் என்று விதி இருந்தது.
# நார்வேயில் வெளியிடப்படும் புத்தகங்களில், 1,000 பிரதிகளை அந்நாட்டு அரசே வாங்கி, நூலகங்களுக்கு அனுப்பிவைக்கும்.
# நார்வேயில் உள்ள நூலகங்களில் புத்தகத்தை எடுத்தால், அதை நாட்டின் எந்த மூலையில் உள்ள நூலகத்திலும் திருப்பிக் கொடுக்கலாம்.
# சென்னையில் உள்ள கன்னிமாரா நூலகம் 1890-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
# ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் நகரில் பூமிக்கு கீழே 16 அடி ஆழத்தில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
# கொல்கத்தாவில் உள்ள தேசிய நூலகம்தான் இந்தியாவின் மிகப்பெரிய நூலகமாகும். இங்கு 22 லட்சம் புத்தகங்கள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x