Published : 27 Nov 2021 03:07 AM
Last Updated : 27 Nov 2021 03:07 AM

பளிச் பத்து 145: நேபாளம்

# அமைதிக்கு பெயர்பெற்ற நாடாக நேபாளம் கருதப்படுகிறது. சமாதானத்தை போதித்த புத்தர், இந்நாட்டில்தான் பிறந்தார்.

# 1,47,181 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நேபாளத்தில், 123 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

# உலகின் உயரமான 10 மலைச்சிகரங்களில் 8 மலைச்சிகரங்கள் நேபாளத்தில் உள்ளன.

# நேபாளம் இதுவரை எந்த நாட்டின் கட்டுப்பாட்டிலும் இருந்ததில்லை. அது சுதந்திர நாடாகவே இருந்துள்ளது.

# நேபாளத்தின் தேசிய விளையாட்டாக வாலிபால் உள்ளது.

# உலகிலேயே நேபாளத்தின் அரசியலமைப்புச் சட்டம்தான் மிகவும் புதியது. கடந்த 2015-ம் ஆண்டில் இது கொண்டுவரப்பட்டது.

# யானைகளின் மீது அமர்ந்துகொண்டு ஆடும் போலோ விளையாட்டு நேபாளத்தில் மிகவும் புகழ்பெற்றது.

# நேபாளத்தில் சனிக்கிழமைதான் வார விடுமுறை நாளாகும். அந்நாட்டில் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை வேலை செய்வார்கள்.

நேபாளத்தின் மக்கள்தொகையில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்துக்கள்.

# இந்நாட்டில் வெறும் 59 கிலோமீட்டர் நீளத்துக்குத்தான் ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x