Last Updated : 25 Nov, 2021 03:12 AM

 

Published : 25 Nov 2021 03:12 AM
Last Updated : 25 Nov 2021 03:12 AM

பளிச் பத்து 144: சைக்கிள்

# 1817-ம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் வோன் டிராயிஸ் என்பவர் 2 சக்கரங்களில் செல்லும் புதுமையான வாகனத்தை கண்டுபிடித்தார். அதுதான் சைக்கிளின் முன்னோடியாக கருதப்படுகிறது.

# பிற்காலத்தில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தில் சைக்கிள்களில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டு, அவை நவீனமயமானது.

# நெதர்லாந்து மக்கள்தான் உலகிலேயே அதிக அளவில் சைக்கிள்களை பயன்படுத்துகிறார்கள். அங்கு ஒவ்வொரு 8 மனிதர்களில் 7 பேர் சைக்கிள் வைத்திருப்பவர்களாக உள்ளனர்.

# சைக்கிள்களை பயன்படுத்தும் மக்களால் ஆண்டுதோறும் 238 மில்லியன் காலன் எரிபொருள் மிச்சமாகிறது.

# ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 மில்லியன் சைக்கிள்கள் தயாரிக்கப்படுகின்றன.

# சைக்கிளில் அதிகம் பயணிப்பவர்களுக்கு இதயநோய், பக்கவாதம் உள்ளிட்டவை வராதுஎன்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

# நியூயார்க் நகரில் 10 சதவீதம் மக்கள் சைக்கிளில்தான் பயணிக்கிறார்கள்.

# பிரெட்.ஏ.பிர்ச்மோர் என்பவர் 1935-ம் ஆண்டில் உலகத்தை சைக்கிளில் சுற்றிவந்தார். கடல் பகுதிகளில் மட்டும் படகில் பயணித்த அவர் 25 ஆயிரம் மைல் தூரத்தை சைக்கிளில் கடந்தார்.

# உலகின் புகழ்பெற்ற சைக்கிள் பந்தயமாக டூர் டி பிரான்ஸ் விளங்குகிறது.

# 1896 ஆண்டுமுதலே ஒலிம்பிக்கில் சைக்கிள் பந்தயங்கள் இடம்பெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x