

வெங்கடேஷ் ஆறுமுகம்
காமராஜர் ஆட்சியைவிடச் சிறந்த ஆட்சி, அம்மா ஆட்சி - நடிகர் ஆனந்தராஜ்.
கட்... சூப்பர் சார். ஒரே டேக்குல பேசிட்டிங்க!
ஆனந்த் குமார்
நான் இருட்டிலும் பேசுவேன்;
வெளிச்சத்திலும் பேசுவேன்;
மைக்கிலும் பேசுவேன்;
மைக் இல்லாமலும் பேசுவேன் - வைகோ
லக்கினத்தில் ஒன்பது கிரகங்களும் சாருக்கு உச்சத்தில் இருக்காம்!
நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
ஆசிய கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கும், தோனிக்கும் திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து
# தலைவரும் 12 மணி வரைக்கும் முழிச்சிருந்து மேட்ச் பாத்துருக்காரு போல.
நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
7 பேர் விடுதலையாக ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க வேண்டும்: நாஞ்சில் சம்பத்
# அதாவது, அம்மா மறுபடியும் முதல்ல இருந்து புரோட்டா திங்கப் போறாங்களா?
ஆழி செந்தில்நாதன்
- மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும் காங்கிரஸும் ‘அண்டர்ஸ்டேன்டிங்’
- கேரளத்தில் நேரெதிர் நிலைகளில்.
- தமிழ்நாட்டில் தனித்தனிக் கூட்டணிகளில் இடதுசாரிகளும் காங்கிரஸும்.
- உத்தரப் பிரதேசத்திலோ இடதுசாரிகள் என்று யாரையும் காணோம்.
இதுதான் இந்தியா என்பதும் இங்கே தேசிய அரசியல் என்று ஏதும் இல்லை என்பதும் இப்போதாவது இடதுசாரிகளுக்கு உறைத்தால் சரி.
இடதுசாரிகளுடைய நிலைப்பாட்டை சந்தர்ப்பவாதம் என்று சொல்வதைவிட, நிஜத்தைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு என்று சொல்லலாம்.
ராமசாமி மணி
இது எப்ப நிறையறது. விஜயகாந்த் எப்பக் கூட்டணி அறிவிக்கறது. நாங்க எப்ப, எப்படி தேர்தலைச் சந்திக்கிறது.
பேயோன்
பாஜக/இந்துத்வ அன்பர்கள் என் பழைய குத்தல்களை மன்னித்து ஒரு கோரிக்கையை ஏற்கவும்: தேர்தலுக்குத் தமிழகத்தில் இந்தியிலேயே பிரச்சாரம் செய்யுங்கள்.