Last Updated : 23 Nov, 2021 03:05 AM

 

Published : 23 Nov 2021 03:05 AM
Last Updated : 23 Nov 2021 03:05 AM

பளிச் பத்து 142: ஸ்பைடர்மேன்

# 1960-களின் தொடக்கத்தில், ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ சூப்பர் ஹீரோகதாபாத்திரங்களைப் போல் தங்களுக்கு ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை உருவாக்கி தருமாறு ஸ்டான் லீ என்பவரை மார்வல் ஸ்டுடியோ கேட்டுக்கொண்டது.

# இதைத்தொடர்ந்து 1962-ம் ஆண்டில் ஸ்டான் லீயால், ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது.

# ஆரம்பத்தில் மார்வல் ஸ்டுடியோவைச் சேர்ந்தவர்களுக்கு இப்பாத்திரம் பிடிக்கவில்லை. மனிதர்களுக்கு பிடிக்காத விஷயங்களில் ஒன்றாக சிலந்தி உள்ளது என்று கூறி நிராகரித்துள்ளனர்.

# ஸ்பைடர்மேனின் காதலிகளாக பல கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.

# ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் 3 முறை சாகடிக்கப்பட்டுள்ளது. பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்பாத்திரத்துக்கு மீண்டும் உயிர் அளிக்கப்பட்டது.

# ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை வைத்து 575 காமிக்ஸ்கள் வந்துள்ளன.

# ஸ்பைடர்மேனின் ரசிகராக இருந்த மைக்கேல் ஜாக்ஸன், அதற்காகவே மார்வல் ஸ்டுடியோவை வாங்க விரும்பினார்.

# ஸ்பைடர்மேனை யூத இனத்தைச் சேர்ந்த இளைஞராக ஸ்டான் லீ படைத்துள்ளார்.

# அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு பிடித்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரமாக ஸ்பைடர்மேன் இருந்தது.

# ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து இதுவரை 6 திரைப்படங்கள் வந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x