Published : 22 Nov 2021 03:05 AM
Last Updated : 22 Nov 2021 03:05 AM

பளிச் பத்து 141: இலங்கை

# ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து 1948 பிப்ரவரி 4-ம் தேதி இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது.

# இலங்கையில் உள்ள மக்களில் 92 சதவீதம் பேர் படிப்பறிவு கொண்டவர்களாக உள்ளனர்.

# யானைகள் அதிகம் கொண்ட நாடு இலங்கை. இங்கு 7,500-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

# யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 8 பாரம்பரியச் சின்னங்கள் இலங்கையில் உள்ளன.

# இலங்கை மக்களில் சுமார் 70 சதவீதம் பேர் பவுத்த மதத்தை சேர்ந்தவர்கள்.

# உலகிலேயே மனிதர்களால் நடப்பட்ட மிக பழமையான மரமாக கருதப்படும் ‘ஜய  மகா போதி’ இலங்கையின் அனுராதபுரா மாவட்டத்தில் உள்ளது.

# இலங்கையின் தேசிய விளையாட்டு வாலிபால்.

# உலக சுகாதார அமைப்பால், மலேரியா இல்லாத நாடாக 2016-ம் ஆண்டில் இலங்கை அறிவிக்கப்பட்டது.

# இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் தேயிலை ஏற்றுமதியை சார்ந்துள்ளது.

# மசாலா பொருட்களில் ஒன்றான லவங்கப்பட்டை இலங்கையில்தான் முதலில் தோன்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x