Last Updated : 17 Nov, 2021 03:05 AM

 

Published : 17 Nov 2021 03:05 AM
Last Updated : 17 Nov 2021 03:05 AM

பளிச் பத்து 136: ஜப்பான்

# உலகிலேயே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடாக ஜப்பான் உள்ளது. அந்நாட்டில் ஆண்டொன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

# ஜப்பானிய மக்கள் அதிகமான ஆயுட்காலம் கொண்டவர்கள். அவர்கள் சராசரியாக 84 ஆண்டுகள் வரை வாழ்கிறார்கள்.

# மீன்வளம் அதிகம் கொண்ட நாடாக ஜப்பான் உள்ளது. அந்நாட்டு கடல்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன் வகைகள் உள்ளன.

# மிகச் சிறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் ஜப்பான் 3-வது இடத்தில் உள்ளது.

# ஜப்பானின் 69 சதவீத நிலப்பகுதி காடுகளாக உள்ளன.

# ஜப்பானில் அதிகபட்சமாக 110 எரிமலைகள் உள்ளன.

# செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஜப்பானியர்களுக்கு ஆர்வம் அதிகம். அந்நாட்டில் குழந்தைகளைவிட நாய்களும் பூனைகளும் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

# ஜப்பானில் 12.7 சதவீத நிலம் மட்டுமே விவசாயத்துக்கு உகந்ததாக உள்ளது.

# அந்நாட்டின் மிகப்பெரிய நதியாக ஷினானோ நதி உள்ளது. இதன் நீளம் 228 மைல்.

# மீன், சிக்கன், குதிரை இறைச்சி போன்றவற்றை வேகவைக்காமல் பச்சையாக உண்ணும் வழக்கம் சில ஜப்பானிய மக்களிடையே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x