Last Updated : 16 Nov, 2021 03:07 AM

 

Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM

பளிச் பத்து 135: ஒட்டகச் சிவிங்கி

 ஒட்டகச் சிவிங்கிகளால் மணிக்கு 35 மைல்கள் வேகத்தில் ஓட முடியும்.

 பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் நிற்கவும், சில சமயம் ஓடவும் ஒட்டகச் சிவிங்கிகளால் முடியும்.

 2 நாட்களுக்கு ஒரு முறைதான் ஒட்டகச் சிவிங்கிகள் தண்ணீர் குடிக்கும்.

 ஒட்டகச் சிவிங்கிகளின் நாக்கு 20 அங்குலம் வரை நீளம் கொண்டது.

 எப்போதும் ஏதாவது இலைகளை அசைபோடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஒட்டகச் சிவிங்கிகள், நாளொன்றுக்கு சுமார் 35 கிலோ உணவை உட்கொள்ளும்.

 ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தின் எடை 11 கிலோ.

 ஒட்டகச் சிவிங்கிகள் 25 ஆண்டுகள்வரை உயிர்வாழும்.

 ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி ‘ஒட்டகச் சிவிங்கிகள் தின’மாக அனுசரிக்கப்படுகிறது.

 ஒட்டகச் சிவிங்கிகளின் காலடிகள் மிகவும் வலிமையானவை. ஒரே அடியில் சிங்கம், புலி போன்ற விலங்குகளைக் கூட வீழ்த்தி விடும்.

 ஒட்டகச் சிவிங்கிகள் நீண்ட நேரம் தூங்காது. அவை 5 நிமிடங்களைக் கொண்ட குட்டித் தூக்கங்களையே போடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x