Published : 16 Nov 2021 03:07 AM
Last Updated : 16 Nov 2021 03:07 AM
ஒட்டகச் சிவிங்கிகளால் மணிக்கு 35 மைல்கள் வேகத்தில் ஓட முடியும்.
பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் நிற்கவும், சில சமயம் ஓடவும் ஒட்டகச் சிவிங்கிகளால் முடியும்.
2 நாட்களுக்கு ஒரு முறைதான் ஒட்டகச் சிவிங்கிகள் தண்ணீர் குடிக்கும்.
ஒட்டகச் சிவிங்கிகளின் நாக்கு 20 அங்குலம் வரை நீளம் கொண்டது.
எப்போதும் ஏதாவது இலைகளை அசைபோடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஒட்டகச் சிவிங்கிகள், நாளொன்றுக்கு சுமார் 35 கிலோ உணவை உட்கொள்ளும்.
ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தின் எடை 11 கிலோ.
ஒட்டகச் சிவிங்கிகள் 25 ஆண்டுகள்வரை உயிர்வாழும்.
ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி ‘ஒட்டகச் சிவிங்கிகள் தின’மாக அனுசரிக்கப்படுகிறது.
ஒட்டகச் சிவிங்கிகளின் காலடிகள் மிகவும் வலிமையானவை. ஒரே அடியில் சிங்கம், புலி போன்ற விலங்குகளைக் கூட வீழ்த்தி விடும்.
ஒட்டகச் சிவிங்கிகள் நீண்ட நேரம் தூங்காது. அவை 5 நிமிடங்களைக் கொண்ட குட்டித் தூக்கங்களையே போடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT