

குரங்குகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை. உலகின் அனைத்து கண்டங்களிலும் அவை வாழ்கின்றன.
குரங்குகள் 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
உலக அளவில் 264 வகை குரங்குகள் உள்ளன.
ஒருசில வகை குரங்குகளால் மட்டுமே வண்ணங்களை வேறுபடுத்தி பார்க்க முடியும்.
‘ஆல்பர்ட் 2’ என்று பெயரிடப்பட்ட குரங்கு 1949-ம் ஆண்டில் முதல்முறையாக விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
மனிதர்களைப் போலவே குரங்குகளுக்கும், எண்ணவும் கணக்கு போடவும் தெரியும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு குரங்குக்கும் பிரத்யேகமாக கைரேகைகள் உள்ளன.
சீனா, மலேசியாவில் குரங்குகளின் மூளைக் கறியை சாப்பிடுகின்றனர்.
பிக்மி மார்மோசெட் வகை குரங்குகள், மிகச் சிறிய அளவுகொண்ட குரங்குகளாக கருதப்படுகின்றன. இவற்றின் உயரம் 5 அங்குலம்.
மேல் மேண்ட்ரில் என்ற குரங்கு வகை மிகப் பெரிய வகை குரங்காகும். இந்த வகை குரங்குகள் 1 மீட்டர் உயரம் வரை வளரும்.