பளிச் பத்து 125: பனாமா கால்வாய்

பளிச் பத்து 125: பனாமா கால்வாய்
Updated on
1 min read

அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலை இனைக்கும் வகையில் பனாமா நாட்டின் குறுக்கே இக்கால்வாய் உள்ளது.

பனாமா கால்வாயை வெட்டும் பணிகள் 1903-ம் ஆண்டில் தொடங்கி 1914-ம் ஆண்டில் முடிக்கப்பட்டன.

இக்கால்வாயை வெட்டும் பணியில் சுமார் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதில் பலரும் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

1977-ம் ஆண்டுவரை, இக்கால்வாய் இதைக் கட்டிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

பனாமா கால்வாயின் நீளம் 77 கிலோமீட்டர்.

இக்கால்வாயில் பயணிக்கும் கப்பல்களிடம், அவற்றின் எடைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 35 முதல் 40 கப்பல்கள் வரை பனாமா கால்வாய் வழியாகச் செல்கின்றன.

இக்கால்வாய் இல்லாவிட்டால், கப்பல்கள் சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர்கள் சுற்றிச் செல்ல நேரிடும்.

நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக பனாமா கால்வாய் கருதப்படுகிறது.

பனாமா கால்வாய் திறக்கப்பட்ட நாள்முதல் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் இதைக் கடந்து சென்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in