Last Updated : 04 Nov, 2021 03:11 AM

 

Published : 04 Nov 2021 03:11 AM
Last Updated : 04 Nov 2021 03:11 AM

பளிச் பத்து 124: பட்டாசு

சீனாவில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் பட்டாசுகள் முதலில் பயன்படுத்தப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பட்டாசு உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்தில் 1486-ம் ஆண்டு நடந்த மன்னர் 7-ம் ஹென்றியின் திருமணத்தில் முதல்முறையாக வானவேடிக்கை நடத்தப்பட்டது.

இந்தியாவின் முதலாவது பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை கொல்கத்தாவில் 19-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது.

விண்ணில் சென்று வெடிக்கும் மிகப்பெரிய ராக்கெட் 2010-ம் ஆண்டில் போர்ச்சுக்கல் நாட்டில் தயாரிக்கப்பட்டது. அதன் எடை 13 கிலோ.

தீபாவளிக்கு பயன்படுத்தப்படும் ராக்கெட்கள் 200 மீட்டர் உயரம் வரை செல்லும்.

அமெரிக்காவில் 1777-ம் ஆண்டில்தான் பட்டாசுகள் முதல்முறையாக அறிமுகமாகின.

16-ம் நூற்றாண்டிலேயே தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் பழக்கம் இந்தியாவில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் பட்டாசு தயாரிப்பில் சிவகாசி முதல் இடத்தில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய வானவேடிக்கை பிலிப்பைன்ஸ் நாட்டில் 2014-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. இந்த வானவேடிக்கை 61 நிமிடங்கள் 32 விநாடிகளுக்கு நீடித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x