பளிச் பத்து 120: கப்பல்

பளிச் பத்து 120: கப்பல்

Published on

கிமு 4,000-ம் ஆண்டுவாக்கில் எகிப்தியர்கள் மரத்தால் செய்யப்பட்ட கப்பல்களை பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளாக கப்பல்கள் இருந்தாலும், 16-ம் நூற்றாண்டு முதல்தான் அவை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆரம்ப காலகட்டத்தில் துடுப்புகளையும், பாய்மரங்களையும் பயன்படுத்தி கப்பல்கள் இயக்கப்பட்டன.

19-ம் நூற்றாண்டில் நீராவிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.

பயணிகள் கப்பல் சராசரியாக மணிக்கு 23 மைல் வேகத்தில் செல்லும்.

இரண்டாம் உலகப் போரின்போது டீசல் இன்ஜின்களைக் கொண்ட கப்பல்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டன.

கப்பல்களில் பணியாற்றுபவர்கள் தங்கும் அறைகள் பெரும்பாலும் கப்பலின் கீழ் பாகத்தில்தான் இருக்கும்.

கப்பல்களில் பூனைகள், குறிப்பாக கறுப்பு பூனைகள் இருந்தால் பயணத்தில் இடையூறுகள் இருக்காது என்ற நம்பிக்கை மேற்கத்திய நாட்டு மக்களிடையே உள்ளது.

சரக்கு கப்பலின் இன்ஜின், கார்களின் இன்ஜினைவிட ஆயிரம் மடங்கு ஆற்றல் வாய்ந்தது.

உலகின் மிகப்பெரிய கப்பலாக ‘சீவைஸ் கப்பல்’ உள்ளது. இதன் நீளம் 458.46 மீட்டர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in