பளிச் பத்து 119: மழை

பளிச் பத்து 119: மழை
Updated on
1 min read

மழைத்துளிகள் மணிக்கு 18 முதல் 22 மைல் வேகத்தில் பூமியை அடைகின்றன.

ஹாண்டுரஸ் நாட்டில் உள்ள யோரோ நகரில் ஒருமுறை மீன் மழை பெய்துள்ளது.

அதிக வெப்பமுள்ள பாலைவனப் பகுதியில் மழை பெய்தாலும், பாதியிலேயே ஆவியாகிவிடும்.

அண்டார்டிகாவில் ஆண்டுக்கு 6.5 அங்குலம் மழை மட்டுமே பெய்கிறது.

பூமியைப் போல் மற்ற கிரகங்களிலும் மழை பெய்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் ஏற்ற வகையில் சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு ஆகிய நிறங்களிலும் சில சமயம் மழை பெய்யும்.

உலகில் தற்போது அதிக மழை பெய்யும் இடங்களாக மேகாலயாவில் உள்ள மாசிராம் மற்றும் ஹவாயில் உள்ள மவுண்ட் வயாலேல் ஆகிய பகுதிகள் உள்ளன.

தங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயற்கை மழையை பெய்ய வைப்பதற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் சுமார் 15 மில்லியன் டாலர்களை செலவழிக்கிறது.

மழைத்துளிகள் மேகத்தில் இருந்து விடுபட்டு பூமியை அடைய 2 நிமிடங்கள் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பழங்குடிகள், மழையை வரவழைப்பதற்காக கூட்டம் கூட்டமாக நடனம் ஆடுவார்கள். தங்கள் உடல் அசைவுகள் மழையை வரவழைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in