பளிச் பத்து 113: பசிபிக் பெருங்கடல்

பளிச் பத்து 113: பசிபிக் பெருங்கடல்
Updated on
1 min read

190 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் பெருங்கடல் தோன்றியதாக கூறப்படுகிறது.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஃபெர்டினான்ட் மேகலன் என்பவர் 1521-ம் ஆண்டில் பசிபிக் பெருங்கடலுக்கு இப்பெயரை வைத்துள்ளார்.

பசிபிக் பெருங்கடல் 165.25 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பசிபிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளன.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் சுமார் 25 ஆயிரம் குட்டித் தீவுகள் உள்ளன.

ஆண்டுதோறும் பசிபிக் பெருங்கடல் சுருங்கி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியாக மெரீனா டிரெஞ்ச் உள்ளது. இப்பகுதி 36,201 அடிகள் ஆழம் கொண்டது.

பசிபிக் பெருங்கடலுக்கு அடியில், சுமார் 40 ஆயிரம் மைல் நீளத்துக்கு மலைத்தொடர் ஒன்று அமைந்துள்ளது.

இக்கடலின் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து கரைகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அதிகமாக கிடைக்கிறது.

உலகில் உள்ள எரிமலைகளில் சுமார் 75 சதவீத எரிமலைகள் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in