

எகிப்து நாட்டின் நிலப்பரப்பு 1.01 மில்லியன் சதுர கிலோமீட்டராகும்.
எகிப்து நாட்டில் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
பண்டைக்காலத்தில் எகிப்து மக்கள் கற்களால் ஆன தலையணயை உபயோகித்துள்ளனர்.
எகிப்தியர்கள் தங்களின் இடதுகை மோதிர விரலில் திருமண மோதிரத்தை அணிவார்கள்.
எகிப்திய மக்கள் பண்டைக்காலத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடவுள்களை வழிபட்டனர்.
எரியவைத்த முட்டை ஓடுகள், எரிமலையின் சாம்பல் ஆகியவற்றைக் கொண்டு முதன்முதலில் எகிப்தியர்கள் பற்பசைகளை உருவாக்கினர்.
எகிப்து நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 70 ஆண்டுகள்.
ரோமானியர்கள் 600 ஆண்டுகளுக்கு மேல் எகிப்து நாட்டை தங்கள் ஆட்சியின்கீழ் வைத்திருந்தனர்.
எகிப்தில் உள்ள மக்கள் முகநூல் பக்கத்தை அதிகம் பயன்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய அணையான, ‘அஸ்வான் ஹை டாம்’ எகிப்து நாட்டில் உள்ளது. இந்த அணை 3 கிலோமீட்டர் நீளமும் 100 மீட்டர் உயரமும் கொண்டது.