

டென்னிஸ் விளையாட்டு பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் வெறும் கைகளால் டென்னிஸ் போட்டிகள் ஆடப்பட்டன. 16-ம் நூற்றாண்டு முதல்தான் டென்னிஸ் ராக்கெட்கள் அறிமுகமாகின.
உலகின் மிகப் பழமையான கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடராக விம்பிள்டன் டென்னிஸ் கருதப்படுகிறது. 1877-ம் ஆண்டுமுதல் இத்தொடர் நடந்து வருகிறது.
மற்ற கிராண்ட் ஸ்லாம் தொடர்களான யுஎஸ் ஓபன் 1881-ம் ஆண்டுமுதலும், பிரெஞ்ச் ஓபன் 1891-ம் ஆண்டுமுதலும், ஆஸ்திரேலியன் ஓபன் 1905-ம் ஆண்டுமுதலும் நடைபெற்று வருகிறது.
டென்னிஸ் போட்டியில் மிகவும் வேகமாக சர்வீஸ் செய்தவர் ஆஸ்திரேலியாவின் சாம் குரோத். இவர் 263.44 கிலோமீட்டர் வேகத்தில் சர்வீஸ் செய்துள்ளார்.
ஆரம்ப கட்டத்தில் தோலுக்குள் முடிகளை நிரப்பி டென்னிஸ் பந்துகள் செய்யப்பட்டன.
டென்னிஸ் போட்டியில் வென்று அதிக அளவில் பரிசுப் பணம் வென்ற வீரராக நொவாக் ஜோகோவிச் உள்ளார். அவர் இதுவரை 143 மில்லியன் டாலர்களை பரிசாக வென்றுள்ளார்.
ஒலிம்பிக் டென்னிஸில் தங்கம் வென்ற முதல் சகோதரிகளாக வீனஸ் வில்லியம்சும், செரீனா வில்லியம்சும் உள்ளனர்.
1986-ம் ஆண்டுவரை டென்னிஸ் பந்துகள் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருந்தன.
டென்னிஸ் பந்தின் எடை 59.4 கிராம்.