Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM

பளிச் பத்து 100: சீப்பு

சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீப்புகள் பயன்படுத்தப்பட்டு வந்ததற்கானஆதாரங்களை அகழாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் சீப்புகளை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

ஆரம்ப காலகட்டத்தில் சீப்புகள் மரங்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

பிற்காலத்தில் யானைத் தந்தம், எலும்பு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டும் உருவாக்கப்பட்டன.

1900-ம் ஆண்டில் தங்கம், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட சீப்பு, 2015-ம் ஆண்டில் 1.70 லட்சம் டாலருக்கு விற்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய சீப்பு, சீனாவின் ஷாங்காய் நகரில் 2020-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.அதன் நீளம் 6.15 மீட்டர்.

அலஸ்காவில் உள்ள ஒரு தம்பதி, தங்கள் வீட்டை சீப்புகளுக்கான அருங்காட்சியகமாக வைத்துள்ளனர். அந்த வீட்டில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்கால சீப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பண்டைக்காலத்தில் சீனாவைச் சேர்ந்தவர்கள் சீப்புகளை அலங்காரத்துக்காக தலையில் சொருகி வைத்துள்ளனர்.

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட சீப்புகளைவிட மரத்தால் செய்யப்பட்ட சீப்புகள்தான் நல்லது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கிமு 160-ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட சீப்பு, டென்மார்க் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x