பளிச் பத்து 97: நைல் நதி

பளிச் பத்து 97: நைல் நதி
Updated on
1 min read

உலகின் நீளமான நதியாக நைல் நதி உள்ளது. இந் நதி 6695 கி.மீ நீளத்துக்கு ஓடுகிறது.

நைல் நதி வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பாய்ந்து, மெடிடரேனியன் கடலில் கலக்கிறது.

தான்சானியா, உகாண்டா, புரூண்டி, ரவாண்டா, கென்யா, சையர், எதியோப்பியா,சூடான், எகிப்து ஆகிய 9 நாடுகளில் நைல் நதி ஓடுகிறது.

நைல் நதி ‘வைட் நைல்’, ‘ப்ளூ நைல்’ என இரண்டு கிளைகளாகப் பிரிந்து ஓடுகிறது.

இந்த 2 கிளைகளும் சூடான் நாட்டில் உள்ள கர்டோம் என்ற நகரில் இணைந்து, எகிப்து நாட்டுக்கு செல்கிறது.

எகிப்து நாட்டு மக்களில் 95 சதவீதம் பேர் இந்த நதியால் பயன்பெறுகிறார்கள்.

9 நாடுகளில் ஓடினாலும், எகிப்து நாட்டில் அதிகமாக ஓடும் நைல் நதி, அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

எகிப்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் 2 வாரங்கள், நைல் நதியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

நைல் நதியின் குறுக்கே அஸ்வான் என்ற மிகப்பெரிய அணை கட்டப்பட்டுள்ளது.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நைல் நதி ஓடிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in