Published : 05 Oct 2021 03:11 AM
Last Updated : 05 Oct 2021 03:11 AM

பளிச் பத்து 96: மாதுளம் பழம்

தொகுப்பு: பி.எம்.சுதிர்

மாதுளம் பழம் மத்திய கிழக்கு நாடுகளில்தான் முதன் முதலில் விளைவிக்கப்பட்டது.

கிமு 1000 ஆண்டுகளுக்கு முன்பே மாதுளை மரங்கள் தோன்றியதாகக் கூறப்படுகிறது.

வறண்ட மற்றும் வெப்பம் மிகுந்த சூழலில் மாதுளை மரங்கள் வளரும்.

மாதுளை மரங்கள் 200 ஆண்டுகள்வரை இருக்கும்.

10 மீட்டர் உயரம் வரை மாதுளை மரங்கள் வளரும்.

760 வகையான மாதுளைகள் உலகில் உள்ளன.

கிரேக்க நாட்டில் புதிய வீட்டில் குடிபுகும்போது மாதுளை மரக் கன்றுகளை பரிசாகக் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அஜர்பைஜான் நாட்டில் ஒவ்வொரு அக்டோபர் மாதமும் மாதுளை திருவிழா கொண்டாடப்படுகிறது.

மாதுளை உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

மாதுளம் பழத்தின் விதைகள் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x