Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM

பளிச் பத்து 91: அமேசான் காடு

தொகுப்பு:பி.எம்.சுதிர்

பிரேசில், பொலீவியா, பெரு, ஈகுவேடார், கொலம்பியா, வெனிசுவேலா, கயானா, சுரினாம், பிரெஞ்ச் கயானா ஆகிய 9 நாடுகளில் அமேசான் காடு பரந்து விரிந்துள்ளது.

40 ஆயிரம் செடி வகைகள், 1,300 பறவை வகைகள், 2,200 மீன் வகைகள், 427 வகை பாலூட்டிகள் அமேசான் காட்டில் உள்ளன.

சுமார் 500 வகையான பழங்குடியினர் இக்காட்டில் வசிக்கின்றனர்.

இக்காட்டின் வழியாக ஓடும் அமேசான் நதி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும்.

இக்காட்டின் அடர்த்தியான பகுதிகளில் சூரிய வெளிச்சம் ஒரு சதவீதம் மட்டுமே ஊடுருவும்.

சமீப காலங்களில், இக்காட்டின் 20 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு விநாடியிலும் 1.5 ஏக்கர் அளவிலான அமேசான் காடு அழிக்கப்பட்டு வருகிறது.

மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் மருந்துகளில், இக்காட்டின் செடிகள் 70 சதவீதம் பயன்படுத்தப்படுகின்றன.

உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான், 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.

2005 முதல் 2010 வரையான காலகட்டத்தில், இக் காட்டில் கடும் வறட்சி ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x