அவள்...
அவள்தானே எல்லாம்...
அவளால்தானே நாம்...
அவளில்தானே இந்த உலகம்...
அவள் யார்?

அன்பு காட்ட அன்னையாக..
சண்டையிடத் தங்கையாக..
சாய்ந்துகொள்ள தோழியாக..
கரம் பற்றக் காதலியாக..
உயிர் கொள்ள மனைவியாக..
பெயர் சொல்லப் பிள்ளையாக..
யார் அவள்?

இந்த மகளிர் தினச் சிறப்பு வீடியோ பாடல் பதிவைக் கொஞ்சம் பாருங்களேன்..

அன்னையாய், பெண்களை மட்டுமே காட்டாமல், பொம்மலாட்டம் மற்றும் நாட்டியத்தின் வழியாக பெண்களைக் காட்சிப்படுத்தியது நல்ல முயற்சி. நமது பாரம்பரியத்தின் இரு வேறு கலைகளை ஒருங்கிணைத்த யோசனையில் புதுமை தெறிக்கிறது.

பொம்மலாட்டத் தாயின் முகத்தில் மிளிரும் தாய்மையும், அதற்கேற்ற வரிகளும் படத்துடன் நம்மை ஒன்றிப்போகச் செய்கின்றன. முக்கியமாக

வலி சுமந்தாள் - உயிர் பெற்றோம்!

கை பிடித்தாள் - நடை கற்றோம்!

என்ற வரிகளுக்கான அபிநயங்களும், பாவனைகளும் நம் பால்யத்தை நினைக்கச் செய்கின்றன.

வடிவரசு ப்ரதீபனின் பாடல் வரிகள், படத்துக்கு அச்சாரமாய் அமைந்திருக்கின்றன. பாடலை ஒட்டி அமைந்திருக்கும் காட்சிகள், படத்தின் பெரும் பலம். ஷ்ரவனின் இசையும், குரலும் பாடலை உயிர்ப்பித்திருக்கிறது. சந்தோஷின் படத்தொகுப்பு கச்சிதம்.

தொப்புள்கொடி வழி உறவு அது; தொலைந்து போகாது. அதன் வீரியத்தைச் சிதைக்காமல் செதுக்கியிருக்கிறது படக் குழு. 'அவள்'களுக்காக 'அவன்'களின் சமர்ப்பணத்துக்கு, எங்களின் ஸ்பெஷல் பூங்கொத்து!