

8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜார்ஜியா நாட்டில் முதல்முறையாக திராட்சை பயிரிடப்பட்டது.
உலகில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திராட்சை வகைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பையை சேர்ந்த தினேஷ் சிவ்நாத் உபாத்யாய் என்பவர் 3 நிமிடங்களில் 205 திராட்சைகளை சாப்பிட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முட்டி வலி வராது என்று கூறப்படுகிறது.
திராட்சைக் கொத்துகளில் 15 முதல் 300 திராட்சைகள் வரை இருக்கும்.
உலகில் மொத்தமாக 75,866 சதுர கி.மீ. பரப்பளவில் திராட்சை பயிரிடப்படுகிறது.
ஸ்பெயின், இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் திராட்சைகள் அதிகம் விளைகின்றன.
திராட்சைகளில் வைட்டமின் சி,வைட்டமின் கே சத்துகள் அதிகமாக உள்ளன.
மொத்த திராட்சை உற்பத்தியில் 71 சதவீதம் ஒயின் தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. 27 சதவீதம் பழமாகவும், 2 சதவீதம் உலர் பழமாகவும் உண்ணப்படுகிறது.
திராட்சைகளை அதிகம் இறக்குமதிசெய்யும் நாடு அமெரிக்கா.