Last Updated : 09 Mar, 2016 08:56 AM

 

Published : 09 Mar 2016 08:56 AM
Last Updated : 09 Mar 2016 08:56 AM

கற்பனை கலாட்டா

‘‘எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?’’

‘‘திருத்திக் கொள்ளுங்கள்! அழைத்து வரவில்லை இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.’’

‘‘நாங்களும் மாதக்கணக்காய் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம். வராமல் போக்கு காட்டிக்கொண்டே இருந்தால் இழுத்துவராமல் என்ன செய்வார்களாம். இப்படியே போனால், மக்கள் மன்றத்தின் முன்னால் ஒரு குற்றவாளியாக நீ மன்னிப்பு கேட்கவேண்டி வரும்.’’

‘‘தமில்ல எனக்கு பிடிக்காத வார்த்தை மண்ணிப்பு.’’

‘‘தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?’’

‘‘புயல் அடிச்சி பொழைச்சவங்ககூட இருக்காங்க. ஆனா இந்த பூபதி அடிச்சி பொழைச்சவன் இல்லே.’’

‘‘சுயநலம் என்பீர்கள். என் சுயநலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தை தடுத்திருக்கவேண்டும்.’’

‘‘தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க.’’

(பின்னணியில் ஒலிக்கிறது ‘‘வாழ்க்கை எனும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்..’’ பாடல்)

‘‘ஆச்சரியக்குறிதான் ஜமீன்தார் அவர்களே.. கொஞ்சம் வளைந்தால் அதுவே கேள்விக்குறியாக மாறிவிடும். அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை.”

‘‘அப்போ என்ன சொல்றீங்க.. கதிர்அரிவாள் கூட்டணி பக்கம் போய் சேரச்சொல்றீங்களா?’’

(பின்னணியில் ‘‘அந்த வானத்தப்போல மனம்படைச்ச மன்னவனே..’’ பாடல் ஒலிப்பதோடு சீன் முடிகிறது.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x