

ஆப்பிள் நிறுவனம் 1976-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கப்பட்டது.
ரொனால்ட் வெய்ன், ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகிய இருவருடன் சேர்ந்து ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார். இதில் ரொனால்ட் வெய்ன் 12 நாட்களிலேயே இந்நிறுவனத்தில் இருந்து விலகினார்.
ஸ்டீவ் ஜாப்ஸ், தனது 25 வயதிலேயே பில்லியனராக உருவெடுத்தார்.
ஸ்டீவ் ஜாப்ஸுக்கு ஆப்பிள் பழம் மிகவும் பிடிக்கும் என்பதால், தனது நிறுவனத்துக்கும் இப்பெயரை வைத்ததாகக் கூறப்படுகிறது.
90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர்.
இங்கு பணியாற்றும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் இந்தியர்களாக உள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு நிமிடமும் தலா 3 லட்சம் அமெரிக்க டாலர்களை ஈட்டுகிறது.
1986-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் துணி வர்த்தகத்திலும் ஈடுபட்டது. ஆனால் இதில் அந்நிறுவனத்தால் வெற்றிபெற முடியவில்லை.
2018-ம் ஆண்டில் ஒவ்வொரு நாளிலும் சராசரியாக 5,72,734 ஐபோன்கள் விற்பனையாகி உள்ளன.
ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, ஒட்டுமொத்த ரஷ்யாவின் சந்தை மதிப்பைவிட அதிகமாகும்.