பளிச் பத்து 87: அரபிக் கடல்

பளிச் பத்து 87: அரபிக் கடல்
Updated on
1 min read

இந்தியப் பெருங்கடலின் ஓர் அங்கமாக அரபிக் கடல் உள்ளது.

9-ம் நூற்றாண்டு முதல் அரேபிய வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை கொண்டுசெல்ல இக்கடலை அதிகம் பயன்படுத்தியதால், இதற்கு அரபிக் கடல் என பெயர் வந்தது.

அரபிக் கடலின் மொத்த பரப்பளவு 38,62,000 சதுர கிலோமீட்டராகும்.

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், ஒமான், ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய ஆசிய நாடுகளையும், ஜிபோடி, சோமாலியா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளையும் இக்கடல் எல்லையாக கொண்டுள்ளது.

மற்ற கடல்களுடன் ஒப்பிடும்போது அரபிக் கடலில் அதிக அளவிலான ஆமைகள் உள்ளன.

அரபிக் கடலின் சராசரி ஆழம் 8,970 அடியாகும்.

ஆறுகள் அதிகமாக கலக்காததால், அரபிக்கடல் வெப்பம் கொண்டதாகவும், அதன் தண்ணீர் உப்புத்தன்மை மிகுந்ததாகவும் உள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இக்கடலில் கப்பல்களின் போக்குவரத்து இருந்துள்ளது.

ஆக்சிஜன் குறைபாடு காரணமாக அரபிக் கடலில் மீன்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

மும்பை, கோவா, கொச்சி, கராச்சி உள்ளிட்ட பல துறைமுகங்கள் அரபிக் கடலைச் சுற்றி உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in