

உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக கனடா உள்ளது.
3 மில்லியனுக்கும் மேற்பட்ட ஏரிகள் கனடாவில் உள்ளன. இதில் 31,700 ஏரிகள் மிகப் பெரியவைகளாகும்.
கனடாவின் மிகப்பெரிய நதியாக மெக்கன்சி உள்ளது. இந்த நதி 4,241 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது.
38 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட கனடாவில், மக்கள் சராசரியாக 83 வயது வரை வாழ்கிறார்கள்.
படிப்பறிவு கொண்டவர்கள் அதிகம் வாழும் நாடான கனடாவில் 99 சதவீதம் பேர் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களாக உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ம் தேதி, அந்நாட்டின் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.
கனடா மக்களுக்கு ஹாக்கி விளையாட்டில் ஆர்வம் அதிகம். அந்நாட்டில் மொத்தம் 2,800 ஹாக்கி மைதானங்கள் உள்ளன.
ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகள் கனடாவின் ஆட்சி மொழிகளாக உள்ளன.
உலகின் மிகப்பெரிய நெடுஞ்சாலையாக இங்குள்ள டிரான்ஸ் கனடா ஹைவே உள்ளது. இதன் நீளம் 7,604 கிலோமீட்டர்.
கனடாவின் நிலப்பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காடுகளாக உள்ளன.