

உலகில் 17 வகையான பென்குயின்கள் உள்ளன.
மிகச் சிறிய வகை பென்குயின்கள் 12 அங்குலம் வரை மட்டுமே வளரும்.
மிகப்பெரிய வகை பென்குயின்கள் 4 அடி உயரம் வரை வளரும்.
இறக்கைகள் இருந்தாலும் பென்குயின்களால் பறக்க முடியாது.
பென்குயின்களால் மணிக்கு 22 மைல் வேகத்தில் நீந்திச் செல்ல முடியும்.
பென்குயின்கள் இரை தேடுவதற்காக 50 கிலோமீட்டர் தூரம்வரை நீந்திச் செல்லும்.
பென்குயின்களால் தண்ணீருக்கு அடியில் 6 ஆயிரம் அடிவரை செல்ல முடியும்.
பென்குயின்களின் குழுக்கள் ‘காலனி’ என்று அழைக்கப்படுகிறது.
உலகின் மிக வயதான பென்குயின் இங்கிலாந்தில் வாழ்ந்தது. அது 40 ஆண்டுகள்வரை உயிர்வாழ்ந்தது.
பெண் பென்குயின்கள் இரைதேடச் செல்லும் சமயங்களில் ஆண் பென்குயின்கள் முட்டைகளை அடைகாக்கும்.