Last Updated : 27 Feb, 2016 10:04 AM

 

Published : 27 Feb 2016 10:04 AM
Last Updated : 27 Feb 2016 10:04 AM

ஊதுறாய்ங்கப்பா ஊர்க்காரய்ய்ங்க!- ஜெ. அடுத்த மூவ் என்ன?

திமுகன்னாலே அது ’அதி ரகசிய முன்னேற்றக் கழகம்’னு ஆகிப் போச்சு.. அந்தக் கட்சில என்ன நடக்குதுனு எக்ஸ்குளூசிவா விசாரிச்சு மேட்டரு குடுன்னு கேட்டா கொழந்தய்க்கு குளிரு ஜொரம்னு லீவு போட்டுட்டு எகிறிடறான் ரிப்போட்டரு.

நாலு நா கழிச்சு வந்து, ’ச்சார்.. ஒங்களுக்கு தெர்யாதது ஒண்ணும்ல்ல.. அம்புட்டு கச்சியும் அருவா சுத்திக்கிட்ருக்கு. ஆனா, அந்த சைடுல எந்தக் குயிலும் கூவல. அம்மா சும்மா இல்லடாங்கிறான். ஆனா, அவங்களோட அடுத்த மூவ் என்னனு கேட்டா.. அலங்க மலங்க முழிக்குறான். அவங்க பக்கத்துல குனிஞ்சு வளஞ்சு நின்னு பேசுற அந்த மூணு நாலு பேருக்கே எதுவும் சொல்ல வெளங்கல..’னு மொள்ளமா சொல்லிட்டு வேற கச்சி மேட்டரு தரட்டுமாங்குறான்.

ஆனா, ஆண்டிபட்டி பங்களா பஸ் ஸ்டாப்புல நின்னுக்கிட்டு நம்ம ஊர்க்காரய்ங்க அந்தக் கட்சியப் பத்தி எம்புட்டு பேச்சு பேசுறாய்ங்க தெர்மா?

‘மார்ச் அமாவாச முடியட்டும்னு அம்மா காத்துக்கிட்ருக்கு. அம்புட்டு பயலுக்கும் இருக்குடி வரிசயா ஆப்பு.. உள்கச்சி வீச்ச முடிச்சுட்டு உருட்டுற உருட்டுல பெர்சண்டேஜ் கணிப்பு போட்டவன்லாம் பணாலாகப் போறான் பாரு..’

’ஏண்ணே.. என்ன சொல்ல வர்றீக?’

‘சைலண்ட்டா போலீசு சப்போட்ட அம்மா கைல எடுத்துட்டாங்கடா.. புரமோசன கைல வாங்கிட்டு வெறப்பா சல்யூட் போட்டு ஆபீசருங்க பக்கத்துல நின்னு போஸ் குடுக்கறத பாக்கத்தான செஞ்ச.. காவத்துறை கண்ணுங்கருத்துமா வேல பாக்க ஆரமிச்சுருச்சு.. சும்மாவா கலைஞ்சரு கதறுவாரு.. கூட்டு சேர வுடாம போலீசு பண்ணுதுன்னு?!’

‘ஆமாண்ணே.. கொஞ்சங் கொஞ்சமா வெளங்குதுண்ணே’

’போலீசு பூராம் அங்கங்க தட்ட வேண்டிய ஆள தட்டும். வெட்ட வேண்டிய ஆள வெட்டும். ஒட்ட வேண்டிய ஆள ஒட்டும்.’

‘அப்ப அந்தக் கட்சியிலயும் எலக்சன் வேல ஆரமிச்சுருச்சு.. என்னண்ணே?’

‘எல்லா அமச்சர்ங்கள்ட்டயும் ஒரு டைரி இருக்கு. வரும்படி டீடெய்ல் பத்துன டைரி. பூராத்தையும் ஓபிஎஸ் அண்ணன விட்டு வாங்கியாறச் சொல்லி கணக்கு பாக்கறாங்களாம். முன்னாடியே வந்தது போக மிச்சம் எவ்ளோ வரும்படி வந்துருக்குனு பாத்துட்டு அமச்சருக்கு செலவு கணக்கு சொல்லுவாங்களாம். தொகுதிக்கு இத்தன ‘சி’ன்னு கணக்கு பண்ணி எறக்கப் போறாங்களாம்..’சி’ பாய்ச்சல்ல சிந்தாம செதறாம ஓட்ட அள்ள அம்பூட்டு திட்டமும் ரெடியாம்’

’எப்படிண்ணே இவ்ளோ வெவரம் சொல்றீங்க?’

‘நம்மகிட்ட நத்தம் ரியல் எஸ்டேட் பார்ட்டி ஒண்ணு டச்ல இருக்குடா.. அம்மா பக்கத்துல போய் நிக்கற அந்த மூணு நாலு பேர்கிட்ட கறந்தா மட்டும் 3 ஆயிரம் ‘சி’ தேறும்னு பேசிக்கறாங்கப்பா.. எந்த தொகுதிக்கு யார் யார் எவ்ளோ எறக்கணும்னு இன்ஸ்ட்ரக்‌ஷன் போயிருச்சாம்.. அந்த மூணு, நாலு பேருகிட்ட எக்ஸ்ட்ராவா தேர்தல் செலவுக்கு கறக்கலாம்னும் கொஞ்சம் அந்தக் கூட்டத்தோட டாமினேஷன குறைக்கலாம்னும் இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் போட்ருக்காம் ‘

’பக்காவாத்தான போய்ட்ருக்கு போல..’

‘வழக்கமா வெரசா வேட்பாளரு பட்டியல வெளிய விட்ருவாங்க அம்மா. இந்தவாட்டி வெசயகாந்து வெளயாட்டுல கொஞ்சம் வேற மாரி யோசிக்குறாங்களாம்.. ஒரே சம்சாரம்.. ஒரே வாழ்க்கனு ஒழுக்கமா இருக்குறவன் பொழச்சான்.. நெத்தில துண்ணூரு, அதுக்கு மேல குங்குமோம்.. அதுக்கும் மேல சந்தனத்தயும் வச்சுட்டு வேற சம்சாரம்.. வேற சமாச்சாரம்னு இருந்தா அம்புட்டுதான். இது எல்லாமே போலீசு ரிப்போர்ட்ல வந்துருதாம். அத பேஸ் பண்ணித்தான் கேண்டிடேட் செலக்சனே இருக்குமாம்.’

’கூட்டணி பேச்சய காணமே?’

‘அம்மாவ பொருத்தவரைக்கும் கூப்டறப்ப வந்து நிக்கற கச்சிதான் கூட்டணிக் கச்சி. இதுக்கு இன்னாத்துக்கு பேச்சு வேண்டி கெடக்கு? இருந்தாலும் பேசுவோமா.. பேசுவாமான்னு குடச்சல் குடுக்குற பிஜேபி மாதிரி கட்சிங்கள்ட்ட பேசணுங்கிற பார்மாலிட்டி இருக்குல்ல.. ஒருபக்கம் சின்னம்மா கோவில் கோவிலா பாத்துப் பாத்து பூச போட்டுக்கிட்டே இருந்தாலும் காலக்கெரகம் இவங்களுக்கு மேலர்ந்து ஒரு ‘சக்தி’ கூட்டணி வெசயத்துல ஆட்டிப் படைக்குதுங்கறாங்க.. இந்த வாட்டியும் ஃப்ரீ அயிட்டம் நெறயா உண்டாம். ஸ்மார்ட் போனு, மளிக சாமான்னு லிஸ்ட் போட்டு வச்சுருக்காங்களாம்.’

சர்ர்ர்னு புழுதி கெளப்பிக்கிட்டு வந்து நின்னுச்சு ஒரு காரு. அதுலர்ந்து எறங்குன ஆளப் பாத்ததும் ஊர்க்காரய்ய்ங்க அப்டியே ஆஃப் ஆயிட்டாய்ய்ங்க..

‘எலேய்.. போன கட் பண்றா மொதல்ல.. எனக்கு போனப் போட்டுட்டு கட் பண்ணாம ஒலக மகா பாலிடிக்ஸ் பேசுறீங்களேடா.. அவனவன் கச்சிலயும் பதவிலயும் நிக்க முடியாம.. அண்ட்ராயரோட கட்டில்ல நிம்மதியா ஒக்காரக்கூட முடியாம தெணறிக்ட்ருக்கான்.. எதுக்கெடுத்தாலும் அவ்ளோ ‘சி’ அவன் வச்சுருக்கான். இவ்ளோ ‘சி’ இவன் வச்சுருக்கான்னுட்டு.. இந்த ‘சி’ எழவு பேச்ச விட்டுத் தொலைங்கடா.. புடிச்சு உள்ள போட்டு நொங்கப் போறாய்ங்க.. போய் பொழப்ப பாருங்கடா..’

ஓஹோ.. இவருதான் ஊர்க்காரய்ங்களோடு டச்ல இருக்குற நத்தம் பார்ட்டியோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x