பளிச் பத்து 80: புர்ஜ் கலிஃபா

பளிச் பத்து 80: புர்ஜ் கலிஃபா
Updated on
1 min read

உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா, 828 மீட்டர் உயரம் கொண்டது.

துபாயில் அமைந்துள்ள இக்கட்டிடத்தில் 160 மாடிகள் உள்ளன.

95 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே இக்கட்டிடத்தைக் காணமுடியும்.

இக்கட்டிடத்தை கட்டும் பணியில் நாள்தோறும் 12 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இக்கட்டிடத்தில் உள்ள கண்ணாடி ஜன்னல்களை ஒருவர் முழுமையாக துடைத்து முடிக்க 3 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

புர்ஜ் கலிஃபாவை கட்டும் பணி 2004-ம் ஆண்டில் தொடங்கி, 2010-ம் ஆண்டில் நிறைவுபெற்றது.

இக்கட்டிடத்தின் 122-வது மாடியில் ஓட்டல் அமைந்துள்ளது.

புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் உள்ள லிப்ட் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் இயங்குகிறது.

தரைப்பகுதியைவிட புர்ஜ் கலிஃபாவின் உச்சியில் 15 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை குறைவாக இருக்கும்.

இக்கட்டிடத்தைவிட உயரமான கட்டிடம் தற்போது ஜத்தா நகரில் கட்டப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in