

அணில்கள் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் வரை வளரும்.
வீட்டில் வளர்க்கப்படும் அணில்கள் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரையும், காட்டில் வளரும் அணில்கள்அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரையும் உயிர் வாழும்.
சில வகை அணில்களால் 300 அடி தூரம் வரை பறக்க முடியும்.
அணில்கள் கருவுற்ற 45 நாட்களுக்குள் குட்டிகளை ஈனும்.
அணில்களுக்கு 4 முன்னம்பற்கள் இருக்கும். அவை வளர்ந்துகொண்டே இருக்கும் தன்மை கொண்டது.
பழங்கள், அவற்றின் கொட்டைகள், இலைகள், பூச்சிகள் ஆகியவற்றை உண்டு அணில்கள் உயிர் வாழும்.
மழையில் இருந்து காத்துக்கொள்ளவும், நீச்சல் அடிக்கவும், உடல் எடையை சமமாக வைத்துக்கொள்ளவும் அணில்களுக்கு அவற்றின் வால்கள் உதவுகின்றன.
சில வகை அணில்கள், மண்ணுக்கு அடியில் சுரங்கம் தோண்டி உணவுகளைச் சேகரித்து வைக்கும்.
அணில்களால் குதிக்கும்போது 180 டிகிரி வரை உடலைத் திருப்ப முடியும்.
ஆஸ்திரேலியாவைத் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அணில்கள் உள்ளன.