

சீனாவில் டாங் சாம்ராஜ்யம் ஆட்சியில் இருந்த காலத்தில்(கி.பி.619-907) டூத் பிரஷ் அறிமுகமானதாக கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து வந்த பயணிகள் மூலம் 17-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் டூத் பிரஷ்கள் அறிமுகமாகின.
உலகில் 24 சதவீதம் பேர் தங்கள் டூத் பிரஷ்களை வாழ்க்கைத் துணையுடன் பகிர்ந்துகொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
1954-ம் ஆண்டில் முதலாவது எலெக்ட்ரிக் டூத் பிரஷ் அறிமுகமானது.
மனிதர்கள் சராசரியாக பல் துலக்குவதற்கு தினந்தோறும்4 நிமிடங்களை செலவு செய்கிறார்கள்.
ஒரு மனிதன் தனது ஆயுள்காலத்தில் சராசரியாக 38.5 நாட்களை பல் தேய்ப்பதற்காக செலவிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
டூத் பிரஷ்ஷில் உள்ள முட்கள் ஆரம்பத்தில் பசுவின் முடிகளால் செய்யப்பட்டன. தற்போது அவை நைலான் இழைகளால் செய்யப்படுகின்றன.
டூத் பிரஷ்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 700 மில்லியன் டூத் பிரஷ்கள் விற்பனையாகின்றன.
ரஷ்யாவை சேர்ந்த கிரிகரி பீஷர் என்பவர் பல்வேறு வகையான 1,320 டூத் பிரஷ்களை சேகரித்து வைத்துள்ளார்.