

பாபுவா நியூ கினியாவில் கி.மு. 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரும்பை பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
‘ஷர்க்கரா’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்துதான் ‘ஷுகர்’ என்ற ஆங்கில வார்த்தை தோன்றியுள்ளது.
லண்டன் நகரில் 16-ம் நூற்றாண்டில் ஒரு ஸ்பூன் சர்க்கரையின் விலை 5 டாலர்களாக இருந்துள்ளது.
கரும்பு உற்பத்தியில் பிரேசில் நாடு முதல் இடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
2018-19-ம் ஆண்டில் 33 மில்லியன் டன் சர்க்கரையை இந்தியா உற்பத்தி செய்தது.
உலகில் உற்பத்தியாகும் சர்க்கரையில் 80 சதவீதம் கரும்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
உலகில் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மக்களால் சர்க்கரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக சர்க்கரை பயன்படுத்தப்பட்டது.
சர்க்கரையை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு இதய நோய் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பெண்களைவிட ஆண்கள் அதிக அளவில் சர்க்கரை சேர்த்துக்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.