

ரோமானிய போர்க் கடவுளின் நினைவாக செவ்வாய் கிரகத்துக்கு ‘மார்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் டீமோஸ், போபோஸ் என இரண்டு நிலவுகள் உள்ளன.
செவ்வாய் கிரகம் சூரியனில் இருந்து சுமார் 141 மில்லியன் மைல் தொலைவில் அமைந்துள்ளது.
பூமியை விட சிறியதான செவ்வாய் கிரகத்தின் விட்டம் 4,217 மைல்களாகும்.
செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் என்பது 24 மணிநேரம் 37 நிமிடங்கள் ஆகும்.
செவ்வாய் கிரகத்தின் ஓர் ஆண்டு 687 நாட்களைக் கொண்டதாகும்.
பூமியை விட செவ்வாய் கிரகத்தில் சுமார் 37 சதவீதம் புவியீர்ப்பு சக்தி குறைவு.
பூமியைப் போன்றே செவ்வாய் கிரகத்திலும் வட துருவமும், தென் துருவமும் உள்ளன.
செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒலிம்பஸ் மலை, 27 கிலோமீட்டர் உயரம் கொண்டது.
பூமியைவிட செவ்வாய் கிரகத்தில் அதிக குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.