

மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கை தூங்கிக் கழிக்கிறார்கள்.
ஆண்களைவிட பெண்கள் அதிக நேரம் தூங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சாண்டியாகோ நகரில் நடந்த அறிவியல் கண்காட்சி ஒன்றில் பங்கேற்ற ராண்டி என்ற மாணவர், அதிகபட்சமாக 11 நாட்கள் 25 நிமிடங்கள் தூங்காமல் இருந்து சாதனை படைத்துள்ளார்.
யானைகள் மிகக் குறைந்த அளவாக நாளொன்றுக்கு 3 மணிநேரம் மட்டுமே தூங்குகின்றன.
சிறு குழந்தைகள் அதிகபட்சமாக 16 மணி நேரம் வரை உறங்குகின்றன.
மனிதர்கள் தங்கள் தூக்கத்தில் தினமும் சராசரியாக 4 முதல் 6 கனவுகள் வரை காண்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டும்தான் தூக்கத்தை தள்ளிப் போடுகிறார்கள்.
பெரும்பாலானவர்களுக்கு தூங்கி எழுந்த 5 நிமிடங்களுக்குள் தூக்கத்தில் கண்ட 50 சதவீத கனவுகள் மறந்துவிடுகின்றன.
மனிதர்களைப் போலவே மிருகங்களும், பூச்சிகளும்கூட சரியாக தூக்கம் வராமல் சில நேரங்களில் தவிக்கும்.
ஆரோக்கியமான மனிதர்கள், படுத்த 7 நிமிடங்களுக்குள் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றுவிடுகிறார்கள்.