

தொடக்க காலத்தில் கிரிக்கெட் பேட்கள் (மட்டைகள்), ஹாக்கியில் பயன்படுத்தப்படும்பேட்களைப் போலதான் இருந்துள்ளன.
1770-ம் ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டுக்கென விதிகள் வகுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்துதான் கிரிக்கெட் பேட் வடிவமும் தற்போது இருப்பதைப் போல மாறியுள்ளது.
கிரிக்கெட் பேட்களின் அகலம் 10.8 சென்டிமீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது என்பதுவிதியாக உள்ளது.
மிகச் சிறிய கைப்பிடியைக் கொண்ட கிரிக்கெட் பேட்களை வீரேந்தர் ஷேவக் பயன்படுத்தினார்.
பெரும்பாலும் ‘வில்லோ’ எனப்படும் மரத்தைப் பயன்படுத்திதான் கிரிக்கெட் பேட்கள் தயாரிக்கப்படுகின்றன.
1979-ல் ஆஸ்திரேலிய வீரரான டென்னிஸ் லில்லி, அலுமினியத்தால் ஆன பேட்டைப் பயன்படுத்தி உள்ளார்.
இந்தியாவில் 1920-ம் ஆண்டில் இருந்துதான் தரமான கிரிக்கெட் பேட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கிரிக்கெட் விதிகளின்படி, பேட்களின் நீளம் 38 அங்குலத்தைவிட அதிகமாக இருக்கக் கூடாது.
அதிக கனமாக மற்றும் உயரம் குறைந்த பேட்களை சச்சின்டெண்டுல்கர் பயன்படுத்தி வந்தார்.
விராட் கோலி பயன்படுத்தும் கிரிக்கெட் பேட் எடை 1.23 கிலோ.